ADDED : ஆக 31, 2026 06:31 PM
அ நிறம் | அளவு
ஆர்.கே.பேட்டை: ‘குட்கா’ போதை புகையிலை பொருட்கள் கடத்தி வந்த லோடு வேனை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநர் கணேசன், 42, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.
ஆர்.கே.பேட்டை போலீசார், நேற்று முன்தினம் இரவு சோளிங்கர் சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த, ‘டாடா ஏஸ்’ லோடு வேனை மடக்கி சோதனை செய்தனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ‘குட்கா’ புகையிலை பொருட்கள் 40 கிலோ சிக்கியது. போதை பொருட்களுடன் லோடு வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேன் ஓட்டுநரான பெரம்பலுார் மாவட்டம், ஆலத்துாரைச் சேர்ந்த கணேசன், 42, என்பவரை கைது செய்து, ஆர்.கே.பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
