UPDATED : ஜூலை 13, 2026 11:44 PM
ADDED : ஜூலை 13, 2026 08:50 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே, துாங்கிக்கொண்டிருந்த லோடுமேன், அடையாளம் தெரியாத சரக்கு வாகனம் ஏறி இறங்கியதில், உடல் நசுங்கி உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் வாகனங்கள் வரும் திசையில், மாநில எல்லையோர சோதனைச்சாவடி அமைந்துள்ளது.
அங்கு, சரக்கு லாரிகளை நிறுத்தி, டிரைவர்கள் ஓய்வெடுக்கும் பகுதியில், நேற்று அதிகாலை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த லோடுமேன் மகேந்திரன், 32, என்பவர் உடல் நசுங்கி உயிரிழந்து கிடந்தார்.
அடையாளம் தெரியாத சரக்கு வாகனம், அவர் மீது ஏறி இறங்கியது தெரியவந்தது. வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், மகேந்திரன் எந்த லாரியில் வந்தார்; அவர் மீது ஏறி இறங்கிய சரக்கு வாகனம் எது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
