/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மெதுாரில் ரேஷன் கடை கட்டடம் சேதம் சீரமைக்க பகுதி மக்கள் கோரிக்கை
/
மெதுாரில் ரேஷன் கடை கட்டடம் சேதம் சீரமைக்க பகுதி மக்கள் கோரிக்கை
மெதுாரில் ரேஷன் கடை கட்டடம் சேதம் சீரமைக்க பகுதி மக்கள் கோரிக்கை
மெதுாரில் ரேஷன் கடை கட்டடம் சேதம் சீரமைக்க பகுதி மக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 17, 2025 02:22 AM

பொன்னேரி:மெதுாரில் ரேஷன் கடை கட்டடம் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால், பொருட்கள் வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்கள் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.
பொன்னேரி அடுத்த மெதுார் கிராமத்தில், ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஒட்டி, ரேஷன் கடை கட்டடம் அமைந்து உள்ளது. இந்த கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாத நிலையில் தற்போது சேதம் அடைந்து கிடக்கிறது.
கட்டடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டும், சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்தும் வருகிறது. கூரைகளிலும் விரிசல்கள் இருப்பதால், மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே கொட்டுகிறது. உள்ளிருக்கும் உணவுப்பொருட்களும் வீணாகிறது.
கட்டடம் இடிந்துவிழும் நிலையில் இருப்பதால் கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.
அசம்பாவிதங்கள் நேரிடும் முன் உடனடியாக ரேஷன் கடை கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.