sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கூடுதல் பஸ்கள் இயக்க வசதியாக 5 புது பணிமனைக்கு இடம் தேர்வு

/

கூடுதல் பஸ்கள் இயக்க வசதியாக 5 புது பணிமனைக்கு இடம் தேர்வு

கூடுதல் பஸ்கள் இயக்க வசதியாக 5 புது பணிமனைக்கு இடம் தேர்வு

கூடுதல் பஸ்கள் இயக்க வசதியாக 5 புது பணிமனைக்கு இடம் தேர்வு


ADDED : அக் 21, 2025 11:22 PM

Google News

ADDED : அக் 21, 2025 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை மற்றும் புறநகரில் கூடுதல் பேருந்துகள் இயக்க வசதியாக, ஐந்து இடங்களில் புதிய பணிமனைகள் அமைக்க, மாநகர போக்குவரத்து கழகம் இடங்களை தேர்வு செய்து உள்ளது.

சென்னையின் எல்லை நாளுக்குநாள் விரிவாக்கப்பட்டு வருகிறது. தற்போது, 700 வழித்தடங்களில், 3,233 மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பயணியர் அவதி தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளாக உயர்த்தப்பட்டுள்ளன. செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவளம், திருப்போரூர், மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதுார் என, மாநகர போக்குவரத்து கழகத்தின் எல்லை மேலும் அதிகரித்துள்ளது.

இருப்பினும், போதிய அளவில் பேருந்துகள் இயக்காததால், பயணியர் அவதிப்படுகின்றனர்.

கிளாம்பாக்கத்தை தொடர்ந்து குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளதால், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

எனவே, கூடுதல் பேருந்து இயக்க வசதியாக, ஐந்து இடங்களில் புதிதாக பணிமனைகள் அமைக்க, இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை, புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் அதிகரித்து வருவதால், பேருந்துகளின் தேவை அதிகமாக இருக்கிறது.

வரும் 2032ல் மாநகர பேருந்துகளின் தேவை 7,578 இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

எனவே, கூடுதல் பேருந்துகள் இயக்க வசதியாக, ஐந்து இடங்களில் புதிய பணிமனைகள் கட்டுவதற்கு இடங்களை தேர்வு செய்துள்ளோம்.

அதிநவீன கருவி அதாவது, திருவள்ளூர், வெளிவட்ட சாலை பகுதியில் வரதராஜபுரம், தையூர், தரமணி, பாடியநல்லுார் அருகில் ஆட்டந்தாங்கல் என, தேர்வு செய்யப்பட்ட இடங்களில், நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்க உள்ளோம்.

இதையடுத்து, 'டெண்டர்' வெளியிட்டு, பேருந்து பராமரிப்புக்கான அதிநவீன கருவிகளுடன், புதிய பணிமனைகள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us