/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வரும் 25ல் நெடுந்துார ஓட்ட போட்டி
/
வரும் 25ல் நெடுந்துார ஓட்ட போட்டி
ADDED : அக் 15, 2025 10:32 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், வரும் 25ம் தேதி நெடுந்துார ஓட்ட போட்டி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 25ம் தேதி நெடுந்துார ஓட்டம் நடக்கிறது. காலை 6:00 மணிக்கு, திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஆண், பெண் இருபாலருக்கும், தனித்தனியாக நெடுந்துார ஓட்ட போட்டி நடைபெறும்.
இதில், 17 - 25 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் 8 கி.மீட்டர், பெண்கள் 5 கி.மீட்டர் துாரமும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 10 கி.மீட்டர் மற்றும் பெண்களுக்கு 5 கி.மீட்டர் துாரமும் போட்டி நடைபெறும். முதல் மூன்று இடத்தை பெறுவோருக்கு, 5,000, 3,000 மற்றும் 2,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர், வரும் 24ம் தேதிக்குள், மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு நேரில் வந்து, தங்கள் பெயரில் உள்ள வங்கி கணக்கின் முதல் பக்கத்தின் நகல், வயது சான்றிதழ், ஆதார் கார்டு ஆகியவற்றை சமர்ப்பித்து, பெயரை பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, மாவட்ட தடகள பயிற்றுநர் லாவண்யாவை, 80729 08634 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.