/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதையில் மிரட்டல் விடுத்தவர் கைது
/
போதையில் மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : அக் 15, 2025 10:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு: மதுபோதையில் பகுதி மக்களிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவரை, போலீசார் கைது செய்தனர்.
பள்ளிப்பட்டு அடுத்த ஈச்சம்பாடி காலனியைச் சேர்ந்தவர் மூர்த்தி மனைவி நந்தினி, 30. இவர், நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து போது, அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ், 19, என்பவர், அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து, நந்தினி மற்றும் அவரது மாமியாரிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும், இருவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ், 47, என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். அவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நாகராஜை, பள்ளிப்பட்டு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.