/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருமுருகன் கோவிலில் கந்தர் சஷ்டி பெருவிழா
/
திருமுருகன் கோவிலில் கந்தர் சஷ்டி பெருவிழா
ADDED : அக் 15, 2025 10:40 PM
நரசிங்கபுரம்: நரசிங்கபுரம் திருமுருகன் கோவிலில், மகா கந்தர் சஷ்டி விழா, வரும் 21ம் தேதி துவங்கி 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் திருமுருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மகா கந்தர் சஷ்டி பெருவிழா, ஆண்டுதோறும் கோலாகலமாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டு மகா கந்தர் சஷ்டி பெருவிழா, வரும் 21ம் தேதி துவங்கி 31ம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழாவில், சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், வரும் 27ம் தேதி மாலை 6:00 மணிக்கு மேல் நடைபெறும்.
வரும் 28ம் தேதி தெய்வானை அம்மையார் திருமணமும் நடைபெறும். வரும் 31ம் தேதி கந்தர் சஷ்டி பெருவிழா நிறைவு பெறும் என, கோவில் நிர்வாக்தினர் தெரிவித்துள்ளனர்.