/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு
/
வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு
வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு
வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு
ADDED : அக் 15, 2025 10:45 PM
திருவள்ளூர்: வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற, விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, மாதந்தோறும் 8,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழறிஞர்களின் மறைவுக்கு பின், அவரின் வாரிசுதாரருக்கு, 3,000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்படி பயன்பெற விரும்பும் வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், tamilvalarchithurai.org/agavai/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப விபரத்தை, திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில், நவ., 17ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.