/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதன்தோறும் மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
/
புதன்தோறும் மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
புதன்தோறும் மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
புதன்தோறும் மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
ADDED : அக் 15, 2025 10:47 PM
திருவள்ளூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம், புதன்கிழமை தோறும் நடைபெற உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளுர் மாவட்டத்தில் வரும் நவ., முதல் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று மற்றும் மத்திய அரசின் தனித்துவ அடையாள அட்டை வழங்கும் முகாம், புதன்கிழமை தோறும் நடைபெற உள்ளது.
முதல் புதன்கிழமை திரு வள்ளூரிலும், இரண்டாம் புதன்கிழமை திருத்தணி, மூன்றாம் புதன்கிழமை பொன்னேரி, நான்காம் புதன்கிழமை ஆவடி ஆகிய நான்கு அரசு மருத்துவமனைகளில் நடைபெறும்.
இதில், 21 வகை பாதிப்புடைய மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு அரசு மருத்துவமனைகளில், காலை 9:00 - 12:00 மணி வரை முகாம் நடைபெறும்.
இம்முகாமில் மருத்துவ சான்று, மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை, இதுவரை பெறாத மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.