/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
4ம் கட்டமாக 89 இடங்களில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
/
4ம் கட்டமாக 89 இடங்களில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
4ம் கட்டமாக 89 இடங்களில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
4ம் கட்டமாக 89 இடங்களில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
ADDED : அக் 15, 2025 10:54 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் நான்காம் கட்டமாக, 89 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், கடந்த ஜூலை 15ல் துவங்கி, கடந்த 14ம் தேதி வரை மூன்று கட்டமாக நடத்தப்பட்டது.
மூன்று முகாம்களில், பல்வேறு துறை சார்பில், 61,800 மனு பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.
மேலும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு, ஒரு லட்சத்து, 16,582 மனுக்கள் பெறப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நான்காம் கட்டமாக, நேற்று முதல், நவ., 14ம் தேதி வரை, 89 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது.
இத்திட்டத்தின்கீழ், 450 தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று தகவல் கையேடு, விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.