/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நீண்ட வரிசையில் காத்திருக்கும் கன்டெய்னர் லாரிகள் மீஞ்சூர் - வண்டலுார் சாலையில் போக்குவரத்து இடையூறு

ADDED : செப் 21, 2025 11:51 PM

மீஞ்சூர்:துறைமுகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு செல்லும் கன்டெய்னர் லாரிகள், போக்குவரத்திற்கு இடையூறாக மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில் நீண்ட வரிசையில் காத்திருப்பதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.
மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கும், பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள கன்டெய்னர் முனையங்களுக்கும், தினமும்100க்கும் மேற்பட்ட லாரிகள் மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலை வழியாக சென்று வருகின்றன.
துறைமுகத்தின் அனுமதிக்காக காத்திருப்பது, வாகனங்களை சரிசெய்வது, லாரி ஓட்டுநர்கள் ஓய்வெடுப்பது என, பல்வேறு காரணங்களுக்காக அங்குள்ள இணைப்பு சாலைகளையே பயன்படுத்த வேண்டும்.
மாறாக, மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பிரதான சாலையோரம் நிறுத்தப்படுகின்றன.
இதனால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்திற்கு ஆளாகின்றனர். இரவு நேரங்களில், லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரியாமல், அதில் மோதி மற்ற வாகனங்கள் விபத்துக்களில் சிக்குகின்றன.
கடந்த 17ம் தேதி அதிகாலை பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில், ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது போன்ற விபத்து சம்பவங்கள் அவ்வப்போது ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் அச்சத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பழுதாகி நிற்கும் லாரிகளை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்துவது, ஒளிரும் விளக்குளை வைத்து, பின்னால் வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை செய்வது என, போக்குவரத்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சாலையில் நிறுத்தப்படும் லாரிகள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.