ADDED : பிப் 12, 2025 09:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, போந்தவாக்கம் கிராமத்தில், மணல் கடத்துவதாக கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட உதவி புவியியாளர் மற்றும் அதிகாரிகள் போந்தவாக்கம் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, மணல் ஏற்றி வந்த இரண்டு லாரியை மடக்கி சோதனை செய்தனர். அது கடத்தல் மணல் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோனுகுமார், 25, சந்தீப்குமார், 21 ஆகிய இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

