ADDED : நவ 04, 2025 09:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: ஆந்திராவில் இருந்து, 10 யூனிட் மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநரை கைது செய்தனர் .
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி, 10 யூனிட் மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.
அதன் ஓட்டுநரான, வெங்கல் அடுத்த ஆரிக்கம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ், 25, என்பவரை கைது செய்த ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

