/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஜாதி சான்று, குடிநீர் வசதி கேட்டு கல்பாக்கம் நரிக்குறவ மக்கள் மனு
/
ஜாதி சான்று, குடிநீர் வசதி கேட்டு கல்பாக்கம் நரிக்குறவ மக்கள் மனு
ஜாதி சான்று, குடிநீர் வசதி கேட்டு கல்பாக்கம் நரிக்குறவ மக்கள் மனு
ஜாதி சான்று, குடிநீர் வசதி கேட்டு கல்பாக்கம் நரிக்குறவ மக்கள் மனு
ADDED : நவ 04, 2025 09:46 PM
மீஞ்சூர்: ஜாதி சான்று, குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கேட்டு, நரிக்குறவ மக்கள் பொன்னேரி வருவாய்த் துறையினரிடம் மனு அளித்தனர்.
மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்பாக்கம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு ஜாதி சான்று வழங்கப்படவில்லை.
மேலும், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி களும் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
நேற்று நரிக்குறவ மக்கள், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலத்தில், இது தொடர்பான மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:
கல்வி, வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு, ஜாதி சான்று வேண்டும். அது இல்லாமல் கல்வி, வாழ்வாதாரம் பாதிக்கிறது. சாலை, குடிநீர் வசதிகளும் இல்லை. வீட்டு மனை பட்டா வழங்கவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம், ஜாதி சான்று வழங்கவும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், வீட்டுமனை பட்டா வழங்கி, அரசின் திட்டத்தில் வீடுகள் அமைத்து தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.