/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இரும்பு திருடிய லாரி ஓட்டுநர் கைது
/
இரும்பு திருடிய லாரி ஓட்டுநர் கைது
ADDED : ஆக 22, 2025 02:28 AM
கும்மிடிப்பூண்டி:தொழிற்சாலையில் இருந்து இரும்பு திருடிய லாரி ஓட்டுநரை, போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில், தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம், சென்னை துறைமுகத்தில் இருந்து ஏற்றி வந்த பழைய இரும்புகளை, இந்த தொழிற்சாலையில் இறக்கிய பின், லாரி கிளம்பியது.
அப்போது, வெளியேறும் வழியில் தொழிற்சாலை காவலாளிகள், லாரியை சோதனையிட்டனர்.
இதில், லாரி ஓட்டுநர் இருக்கையின் பின்புறம், 25 கிலோ பழைய இரும்புகளை மறைத்து எடுத்துச் சென்றது தெரிந்தது.
இதுகுறித்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், லாரி ஓட்டுநரான பெரம்பலுார் மாவட்டம், வேப்பன்தட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், 42, என்பவரை கைது செய்தனர்.