/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விபத்தில் உருக்குலைந்த லாரி ஓட்டுனருக்கு தீவிர சிகிச்சை
/
விபத்தில் உருக்குலைந்த லாரி ஓட்டுனருக்கு தீவிர சிகிச்சை
விபத்தில் உருக்குலைந்த லாரி ஓட்டுனருக்கு தீவிர சிகிச்சை
விபத்தில் உருக்குலைந்த லாரி ஓட்டுனருக்கு தீவிர சிகிச்சை
ADDED : ஆக 31, 2025 02:39 AM

கும்மிடிப்பூண்டி,:கும்மிடிப்பூண்டியில் பழுதாகி நின்ற லாரியின் பின்னால், கன்டெய்னர் லாரி மோதி உருக்குலைந்தது. படுகாயமடைந்த ஓட்டுனர், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னையில் இருந்து ஹைதராபாத் நோக்கி, சோலார் பேனல்களை ஏற்றிக் கொண்டு கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் சந்திப்பில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது, முன்னால் பழுதாகி நின்ற சரக்கு லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் கன்டெய்னர் லாரியின் கேபின் பகுதி முற்றிலும் உருக்குலைந்தது. தலை மற்றும் கால் பகுதியில் படுகாயமடைந்த கன்டெய்னர் லாரியின் ஓட்டுநர் ஜெயமுருகன், 24, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது. நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மேம்பாலத்தை அடைத்து, மாற்று பாதையில் வாகனங்களை திருப்பி விட்டனர்.
பின், கிரேன் மூலம் விபத்துக்குள்ளான கன்டெய்னர் லாரி அகற்றப்பட்டது. நேற்று மதியத்திற்கு மேல், போக்குவரத்து சீரானது. இதுகுறித்து, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

