/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மைய தடுப்பில் மோதி சாலையில் கவிழ்ந்த லாரி
/
மைய தடுப்பில் மோதி சாலையில் கவிழ்ந்த லாரி
ADDED : ஜூலை 12, 2025 01:06 AM

ஆர்.கே.பேட்டை:கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி, மாநில நெடுஞ்சாலை மைய தடுப்பில் மோதி கவிழ்ந்த விபத்தில், லாரி ஓட்டுநர் காயமடைந்தார்.
திருவள்ளூர், ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் வழியாக, சித்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலை, நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இதில், கோபாலபுரம் அருகே புதிதாக, சாலை மைய தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
நேற்று அதிகாலை இந்த வழியாக, சோளிங்கர் நோக்கி வந்த லாரி ஒன்று, கோபாலபுரம் அருகே சாலை மைய தடுப்பில் மோதி சாலையில் கவிழ்ந்தது. லாரி ஓட்டுநரை மீட்ட பகுதி மக்கள், ஆம்புலன்சில் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து, ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில், லாரியை ஓட்டி வந்தவர் சென்னை, மணலியைச் சேர்ந்த மன்னவன், 45, என தெரிந்தது. போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.