/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி லாரிகள் வேலைநிறுத்தம் தொடரும்
/
பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி லாரிகள் வேலைநிறுத்தம் தொடரும்
பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி லாரிகள் வேலைநிறுத்தம் தொடரும்
பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி லாரிகள் வேலைநிறுத்தம் தொடரும்
ADDED : மே 26, 2025 11:43 PM
மீஞ்சூர்,
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில், பாரத் பெட்ரோலிய முனையம் உள்ளது. இங்கிருந்து, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் 'பங்க்'குகள், விமான நிலையம் ஆகியவற்றிற்கு எரிபொருள் கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக, 150 லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன. புதிய வாடகை ஒப்பந்த நடைமுறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, கடந்த 23ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று மாலை லாரி உரிமையாளர்கள், பாரத் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் இடையே பேச்சு நடந்தது. இதில், சுமுக தீர்வு எட்டப்படவில்லை. இதனால், லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறியதாவது:
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் முடிவுற்றது. அதிலிருந்து மூன்று, மூன்று மாதங்களாக புதுப்பித்து வருகின்றனர். வாடகையை, 10 சதவீதம் உயர்த்தி, புதிய ஒப்பந்தம் போடும்படி வலியுறுத்தி வருகிறோம். ஆனால் நிர்வாகம், தற்போது வழங்கி வரும் வாடகையில் இருந்து, 10 சதவீதம் குறைத்து, புதிய ஒப்பந்தம் அறிவிக்கிறது.
வண்டி தேய்மானம், போக்குவரத்து செலவு, உதிரிபாகங்கள் விலை உயர்வு உள்ளிட்டவைகளால், தற்போது வழங்கும் வாடகையே கட்டுப்படியாகாத நிலையில், 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை. போராட்டத்தை தொடர்கிறோம். மற்ற பெட்ரோலிய நிறுவனங்களுக்கு இயங்கும் லாரி உரிமையாளர்களிடம் பேசி, போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

