/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தாமரை ஏரி மீட்பு குழு ஆலோசனை கூட்டம்
/
தாமரை ஏரி மீட்பு குழு ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 17, 2025 12:32 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியை அழிவில் இருந்து மீட்பது குறித்து, சுற்றியுள்ள குடியிருப்பு மக்கள் சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
கும்மிடிப்பூண்டி நகரின் முக்கிய நீராதரமான, 48 ஏக்கர் பரப்பளவு கொண்ட தாமரை ஏரி, நீர்வளத்துறையினர் பராமரிப்பில் உள்ளது. ஏரியில் தொழிற்சாலை கழிவுநீர் மற்று ம் டேங்கர் லாரியின் கழிவுநீர் திறந்துவிடப்படுவதால், ஐந்து ஆண்டுகளாக ஏரியில் கழிவுநீர் மட்டுமே தேங்கியுள்ளது.
அரசு துறையினர் கண்டுகொள்ளாததால், ஏரியை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசவதுடன், 2 கி.மீ., சுற்றளவில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த நிலத்தடி நீரால், வீட்டு பயன்பாட்டில் உள்ள உலோகங்கள் கருமை நிறத்தில் மாறி வருவதால், மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தாமரை ஏரியை அழிவில் இருந்து மீட்பது குறித்து, சுற்றியுள்ள குடியிருப்பு மக்கள் சார்பில், நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில், 200க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். அதில், 'தாமரை ஏரி மீட்பு குழு' என்ற பெயரில் அமைப்பு ஏற்படுத்தி, அதன் மூலமாக மாவட்ட நிர்வாகத்தை அணுகி தீர்வு காணப்படும். தீர்வு கிடைக்காமல் போனால், போராட்டங்கள் மேற்கொள்வது குறித்து, அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்' என, தெரிவித்தனர்.

