/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடன் தொல்லையால் ஐ.டி., ஊழியர் திருத்தணி விடுதியில் தற்கொலை
/
கடன் தொல்லையால் ஐ.டி., ஊழியர் திருத்தணி விடுதியில் தற்கொலை
கடன் தொல்லையால் ஐ.டி., ஊழியர் திருத்தணி விடுதியில் தற்கொலை
கடன் தொல்லையால் ஐ.டி., ஊழியர் திருத்தணி விடுதியில் தற்கொலை
ADDED : நவ 17, 2025 12:31 AM
திருத்தணி: சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வந்தவர் விஜயன், 42; தரமணியில் ஐ.டி., ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கியிருந்தார்.
இதற்கு, வட்டி செலுத்த முடியாமல் கடும் சிரமப்பட்டார். மேலும், குடும்பத்திலும் தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால். மனமுடைந்த விஜயன், நேற்று முன்தினம் திருத்தணி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார். நேற்று காலை வரை அறையின் கதவு திறக்காததால், விடுதி மேலாளர் திருத்தணி போலீசாருக்கு தகவல் அளித்தார்.
விரைந்து வந்த போலீசார், அறையின் கதவை உடைத்து பார்த்தபோது, விஜயன் இறந்து கிடந்தார். அருகே, மாத்திரைகள் இருந்த காலி அட்டை மற்றும் கடிதம் இருந்தன. அதில், 'கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறேன்' என, எழுதி வைத்திருந்தார்.
விஜயன் உடலை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விஜயனுக்கு சாந்தி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

