/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேசிய வில்வித்தை போட்டி: கும்மிடி மாணவி தேர்வு
/
தேசிய வில்வித்தை போட்டி: கும்மிடி மாணவி தேர்வு
ADDED : நவ 17, 2025 12:31 AM

கும்மிடிப்பூண்டி: தேசிய வில்வித்தை போட்டியில் பங்கேற்க இருக்கும் தமிழக ஜூனியர் இந்திய வில்வித்தை அணியில், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மாணவி இடம்பிடித்தார்.
தமிழக வில்வித்தை கூட்டமைப்பு சார்பில், கடந்த வாரம் தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் வில்வித்தை போட்டிகள் நடந்தன. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த 1,500 இருபால் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில், 21 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஜூனியர் 'இந்திய வில்வித்தை' பிரிவில், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி தவுஷிகா தஸ்னீம், 14, வெண்கல பதக்கம் வென்றார்.
அடுத்த மாதம், அருணாச்சல பிரதேச மாநிலத்தில் தேசிய வில் வித்தை போட்டி நடைபெற உள்ளது. அதில், பங்கேற்க இருக்கும் தமிழக ஜூனியர் இந்திய வில்வித்தை அணியில் தவுஷிகா தஸ்னீம் இடம்பிடித்தார்.

