/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குட்கா பறிமுதல் : ஐந்து பேர் கைது
/
குட்கா பறிமுதல் : ஐந்து பேர் கைது
ADDED : நவ 17, 2025 12:31 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே பல்லவாடா கிராமத்தில், போலீசார் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து மாதர்பாக்கம் நோக்கி வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், 88 கிலோ குட்கா கடத்தியது தெரியவந்தது. ஆட்டோவுடன் குட்கா பண்டல்களை பறிமுதல் செய்தனர். அதை கடத்திய, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சம்பத், 57, அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜூ, 25, அனரூல் ஹக், 26 மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான விஜயகுமார், 24, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
அதேபோல், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த சுரேஷ், 45, என்பவரிடம், 3.50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. ஆரம்பாக்கம் போலீசார், அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

