/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாடு மீது மோதி விபத்து: புதுமாப்பிள்ளை உயிரிழப்பு
/
மாடு மீது மோதி விபத்து: புதுமாப்பிள்ளை உயிரிழப்பு
மாடு மீது மோதி விபத்து: புதுமாப்பிள்ளை உயிரிழப்பு
மாடு மீது மோதி விபத்து: புதுமாப்பிள்ளை உயிரிழப்பு
ADDED : நவ 17, 2025 12:30 AM
ஊத்துக்கோட்டை: வெங்கல் அடுத்த செம்பேடு கிராமத்தில் வசித்து வந்தவர் புண்ணியகோட்டி, 40. இவரது மனைவி மகாலட்சுமி, 29. இவர்களுக்கு, மூன்று மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது.
திருவள்ளூர் அடுத்த மப்பேடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் புண்ணியகோட்டி பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை, பைக்கில் வேலைக்கு சென்றார். பின், பணி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வெள்ளியூர் அருகே வந்தபோது, குறுக்கே வந்த மாடு மீது மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த வெங்கல் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, வெங்கல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.