/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
/
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
ADDED : ஆக 20, 2025 02:15 AM

கும்மிடிப்பூண்டி:பாலத்தை ஒட்டி தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே, மாநெல்லுார் கிராமத்தில் இருந்து பல்லவாடா கிராமம் நோக்கி செல்லும் சாலையின் இடையே பாலம் உள்ளது. இப்பாலத்தை ஒட்டி மிகவும் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால், அவ்வழியாக கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
பலத்த காற்று வீசினால், இந்த மின்கம்பிகள்வாகனங்கள் மீது உரச வாய்ப்புள்ளது என, வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
எனவே, மாதர்பாக்கம் துணைமின் நிலைய ஊழியர்கள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.