/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குறைந்த மின்னழுத்த பிரச்னை ஆற்காடுகுப்பம் மக்கள் அவதி
/
குறைந்த மின்னழுத்த பிரச்னை ஆற்காடுகுப்பம் மக்கள் அவதி
குறைந்த மின்னழுத்த பிரச்னை ஆற்காடுகுப்பம் மக்கள் அவதி
குறைந்த மின்னழுத்த பிரச்னை ஆற்காடுகுப்பம் மக்கள் அவதி
ADDED : மார் 22, 2025 11:38 PM
திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம் ஆற்காடுகுப்பம் ஊராட்சியில். 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு. ஒரு வாரமாக 24 மணி நேரமும் அடிக்கடி மின்வெட்டு தொடர்வதுடன், குறைந்தளவு மின்சாரத்தால் பகுதிவாசிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக, இரவு முழுதும் குறைந்த மின்னழுத்தம் தொடர்வதால், மின் சாதன பொருட்கள் பழுதடைகின்றன. புழுக்கத்தால் குழந்தைகள், முதியவர்கள் இரவில் தூக்கத்தை தொலைத்து கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.