/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சென்னை கூடைப்பந்து போட்டி லயோலா கல்லுாரி அணி அசத்தல்
/
சென்னை கூடைப்பந்து போட்டி லயோலா கல்லுாரி அணி அசத்தல்
சென்னை கூடைப்பந்து போட்டி லயோலா கல்லுாரி அணி அசத்தல்
சென்னை கூடைப்பந்து போட்டி லயோலா கல்லுாரி அணி அசத்தல்
ADDED : ஜூன் 26, 2025 02:07 AM
சென்னை, மாநில அளவிலான மின்னொளி கூடைப்பந்து போட்டியில், சென்னை லயோலா கல்லுாரி அணி, 81 - 45 என்ற புள்ளிக்கணக்கில், டொர்னாடோஸ் அணியை வீழ்த்தியது.
மேயர் ராதாகிருஷ்ணன் கிளப் சார்பில், மாநில அளவிலான மின்னொளி கூடைப்பந்து போட்டி,எழும்பூரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. 34 ஆண்கள் அணி, 14 பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ளன.
ஆண்களுக்கு 'லீக்' கம் நாக் அவுட் முறையிலும், பெண்களுக்கு நாக் அவுட் முறையிலும் போட்டிகள் நடக்கின்றன.
நேற்று முன்தினம் மாலை நடந்த ஆடவருக்கான ஆட்டத்தில், லயோலா கல்லுாரி அணி, டொர்னாடோஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இதில், லயோலா கல்லுாரி அணி 81 - 45 என்ற புள்ளிக்கணக்கில் டொர்னாடோஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மற்றொரு ஆடவருக்கான போட்டியில், தமிழக போலீஸ் அணி 75 - 33 என்ற புள்ளிக்கணக்கில் நாகன் எம்.பி.சி., அணியை வீழ்த்தி, வெற்றியை பதிவு செய்தது.
அடுத்து நடந்த பெண்கள் பிரிவு முதல் போட்டியில், எஸ்.டி.ஏ.டி., மகளிர் அணி மற்றும் கே.பி.ஆர்., கோவை அணிகள் மோதின. இதில், எஸ்.டி.ஏ.டி., மகளிர் அணி 48 - 36 என்ற புள்ளியில் கே.பி.ஆர்., கோவை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் ரைசிங் ஸ்டார் அணி, பீனிக்ஸ் இந்தியன் ஏ.சி.ஏ., அணியை எதிர்த்து மோதியது. இதில், 72 - 45 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. கடைசி போட்டியில், தமிழக போலீஸ் மகளிர் அணி 59 - 40 என்ற புள்ளிக்கணக்கில் கோல்டன் ஈகிள் அணியை வீழ்த்தியது.