/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'பெர்ட்ரம்' வாலிபால் சாம்பியன்ஷிப் 9 ஆண்டிற்குபின் வென்ற லயோலா
/
'பெர்ட்ரம்' வாலிபால் சாம்பியன்ஷிப் 9 ஆண்டிற்குபின் வென்ற லயோலா
'பெர்ட்ரம்' வாலிபால் சாம்பியன்ஷிப் 9 ஆண்டிற்குபின் வென்ற லயோலா
'பெர்ட்ரம்' வாலிபால் சாம்பியன்ஷிப் 9 ஆண்டிற்குபின் வென்ற லயோலா
ADDED : ஆக 29, 2025 12:36 AM

சென்னை :'பெர்ட்ரம்' நினைவு வாலிபால் போட்டி சாம்பியன் கோப்பையை, ஒன்பது ஆண்டுகளுக்கு பின் வென்று லயோலா கல்லுாரி அணியினர் அசத்தினர்.
லயோலா கல்லுாரி நிறுவனர், 'பெர்ட்ரம்' நினைவு விளையாட்டு போட்டிகள், 91வது ஆண்டாக நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.
பள்ளி, கல்லுாரிகளுக்கு இடையிலான இப்போட்டியில், தென் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அணிகள் பங்கேற்றுள்ளன.
இதில், கல்லுாரிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில், 32 அணிகள், 'நாக் அவுட்' மற்றும் 'லீக்' முறையில் மோதின.
நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில், பனிமலர் அணி, 25 - 23, 25 - 18, 25 - 20 என்ற புள்ளிக்கணக்கில் கோவை பி.எஸ்.ஜி., அணியையும், லயோலா அணி, 25 - 14, 25 - 12, 22 - 25, 25 - 10 என்ற கணக்கில், திருப்பத்துார் சேகரட் ஹார்ட் கல்லுாரியையும் வீழ்த்தின.
மற்றொரு ஆட்டத்தில், லயோலா மற்றும் பி.எஸ்.ஜி., அணிகள் மோதின. முதல் செட்டை பி.எஸ்.ஜி., அணி கைப்பற்றிய நிலையில், அடுத்தடுத்து இரண்டு செட்களில், லயோலா கல்லுாரி அணி வெற்றி பெற்று அசத்தியது.
அனைத்து போட்டிகள் முடிவில், லயோலா கல்லுாரி முதலிடத்தை பிடித்து, ஒன்பது ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அதைத்தொடர்ந்து, பனிமலர், கோவை பி.எஸ்.ஜி., மற்றும் திருப்பத்துார் சேகரட் ஹார்ட் கல்லுாரிகள், அடுத்தடுத்த இடங்களை கைப்பற்றின.
போட்டியில், வெற்றி பெற்ற அணிகளுக்கு, மாநில வாலிபால் சங்கத்தின் பொதுச் செயலர் மார்ட்டின் சுதாகர், சுங்கத்துறை உதவி கமிஷனர் இருதயராஜ், ஓய்வு பெற்ற கூடுதல் சுங்க கமிஷனர் தமிழ்வேந்தன், லயோலா கல்லுாரியின் முதல்வர் லுாயிஸ் ஆரோக்கியராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.