/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கீழ்மணம்பேடு கோவிலில் 26ல் மகா கும்பாபிஷேகம்
/
கீழ்மணம்பேடு கோவிலில் 26ல் மகா கும்பாபிஷேகம்
ADDED : ஜன 23, 2025 01:00 AM
கீழ்மணம்பேடு, திருமழிசை அடுத்த, கீழ்மணம்பேடு பகுதியில் அமைந்துள்ளது ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில். இந்த கோவிலில் மஹா கும்பாபிஷேகம் வரும் 26ம் தேதி காலை 9:00 மணி முதல், 10:30 மணிக்குள் நடைபெறும்.
முன்னதாக, நாளை, காலை 4:30 மணிக்கு புண்யாகவசனத்துடன் நிகழ்ச்சி துவங்கி தொடர்ந்து, வாஸ்து ஹோமமும், அங்குரார்பணமும், வேதபிரபந்த சாற்றுமுறை தொடக்கமும் நடைபெறும். பின், யாக குண்டங்களில் அக்னி பிரதிஷ்டையும் நடைபெறும்.
பின், மறுநாள், காலை 4:30 மணியளவில் கும்ப ஆராதனமும் முதல்கால யாகசாலை பூஜையும், தீபாராதனையும் நடைபெறும். மதியம் 2:30 மணியளவில் நவகலச ஸ்பதன திருமஞ்சனமும், விமான கலச பூஜைகளும் நடைபெறும்.
மஹா கும்பாபிஷேக நாளான 26ம் தேதி, காலை 9:00 மணியளவில் கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகமும், ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும், சாற்றுமுறையும் தீபாராதனையும் நடைபெறும். மதியம் 3:00 மணிக்கு திருக்கல்யாண வைபவமும் நடைபெறும்.
வரும் 27ம் தேதி முதல், மண்டல பூஜை நடைபெறும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.