/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பு இல்லாத கலெக்டர் அலுவலக பூங்கா
/
பராமரிப்பு இல்லாத கலெக்டர் அலுவலக பூங்கா
ADDED : மார் 17, 2024 01:26 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், நுழைவாயிலின், இடது புறம் காலியாக, புதர் மண்டி கிடந்த இடம், கடந்த, 2008-09ம் ஆண்டு, பூங்காவாக மாற்றப்பட்டது.
அங்கு சிறுவர்கள் விளையாட, சிறிய ராட்டினம், சீசா, சறுக்கு போன்ற விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டன. நிழற்குடைகளும், இருக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.
மேலும், பூங்கா நடுவில் சிறிய குளம் அமைத்து, சுற்றிலும் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடை தளம் அமைக்கப்பட்டிருந்தது.
சுற்றிலும், மரம் நடப்பட்ட இந்த பூங்காவில், வாரந்தோறும் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வருவோர், இங்கு இளைப்பாறி வருகின்றனர்.
தற்போது இந்த பூங்கா முறையான பராமரிப்பு இல்லாமல், புதர் மண்டிக் காணப்படுகிறது. பொதுமக்கள் அமரும் இருக்கைகள் அனைத்தும், சுற்றிலும் செடிகள் வளர்ந்துள்ளன. 'சீசா' மற்றும் சறுக்கு உபகரணம் உள்ள இடத்தில், பள்ளமாக இருப்பதால், சிறுவர் விளையாடும் போது, கீழே விழுந்து காயமடைய நேரிடுகிறது. நடைபாதை பயிற்சி பாதையும் செடிகள் சூழ்ந்து உள்ளது.
எனவே, சேதமடைந்த சிறுவர் பூங்காவை சீர்படுத்தி, பொதுமக்கள் இளைப்பாறவும், சிறுவர்கள் விளையாடவும் வசதி ஏற்படுத்தித் தருமாறு, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவள்ளூர், மார்ச் 17-
திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்திற்கு பின்பகுதியில், மாவட்ட ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாதந்தோறும், மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த அலுவலகத்தைச் சுற்றிலும் முறையாக பராமரிக்காததால், சுவரை ஒட்டி, முட்செடிகள் வளர்ந்து, புதராகக் காட்சியளிக்கிறது. மேலும், சுவருக்கு அருகில் வளர்ந்துள்ள கொடிகள் அலுவலகத்தைச் சுற்றிலும் படர்ந்து, மாடி வரை பரவி உள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். மேலும், அலுவலகத்தின் பின்புறம், மின்பெட்டி, திறந்த நிலையில் உள்ளது.
எனவே, மாவட்ட ஊராட்சி அலுவலகத்தைச் சுற்றிலும் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றி, முறையாக பராமரிக்க வேண்டும் என, ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

