/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பு இல்லாத குதிரைப்பள்ளம் தடுப்பணை
/
பராமரிப்பு இல்லாத குதிரைப்பள்ளம் தடுப்பணை
ADDED : நவ 10, 2024 02:15 AM

சோழவரம்:சோழவரம் அடுத்த குதிரைப்பள்ளம் - புதுகுப்பம் கிராமங்களுக்கு இடையே, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, 2018 ல், 9.90 கோடி ரூபாயில் தடுப்பணை அமைக்கப்பட்டது.
இதில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், ஜெகன்னாதபுரம், பசுவன்பாளையம், புதுகுப்பம், குதிரைப்பள்ளம் ஆகிய கிராமங்களின் நிலத்திடி நீர் பாதுகாப்பிற்கும், விவசாயத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது.
தற்போது பெய்து வரும் மழையால், தடுப்பணை நிரம்பி உள்ளது. அதே சமயம் தடுப்பணை பகுதி பராமரிப்பு இன்றி உள்ளது. தடுப்பணையின் கான்கிரீட் கட்டுமானங்கள் அருகில் ஆற்றின் கரையில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இது ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்கும்போது பாதிப்புகளை ஏற்படுத்தும்.
மேலும், அப்பகுதி முழுதும் முள்செடிகள் வளர்ந்து புதராக இருக்கிறது. இவற்றால் தடுப்பணை பகுதியில் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே அறிய முடியாமலும், அவசர கால பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையும் உருவாகி உள்ளது.
தடுப்பணை பகுதியை நீர்வளத்துறையினர் ஆய்வு செய்து, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.