ADDED : ஏப் 13, 2025 02:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் பீரகுப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, தினமும் 300க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையம் வளாகத்தில் பராமரிப்பின்றி தரைமட்ட கிணறு உள்ளது.
தற்போது, இந்த கிணற்று தண்ணீரை பயன்படுத்துவதும் இல்லை.
மேலும், கிணற்றில் தண்ணீரும் இல்லாமல் சுற்றியும் செடிகள் வளர்ந்துள்ளன. வீணாகி வரும் கிணற்றை சுற்றுலும், சுற்றுச்சுவர் அமைக்காமல் உள்ளது.
மேலும், பயன்பாடு இல்லாத கிணற்றை மூடாததால், நோயாளிகள் மற்றும் அவருக்கு உதவியாக வருவோர் கிணற்றில் தவறி விழும் அபாயம் உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பயன்பாடு இல்லாமல் உள்ள கிணற்றி மூட வேண்டும் அல்லது கிணற்றை சுற்றியும் சுற்றுசுவர் எழுப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.