/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கன்னிகைப்பேர் ஏரியில் ஆண் பிணம் மீட்பு
/
கன்னிகைப்பேர் ஏரியில் ஆண் பிணம் மீட்பு
ADDED : ஜன 12, 2025 08:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அடுத்த, கன்னிகைப்பேர் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.
கிராம நிர்வாக அதிகாரி சிவகுமார், பெரியபாளையம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் பார்த்தபோது, அங்கு, 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பது தெரியவந்தது. போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.