/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டி.ஆர்.ஓ.,விடம் தகராறு செய்தவர் சிக்கினார்
/
டி.ஆர்.ஓ.,விடம் தகராறு செய்தவர் சிக்கினார்
ADDED : மார் 18, 2025 09:18 PM
திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம் சிவாடா மேட்டுக் காலனியில் வசிப்போருக்கு, வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்ய நேற்று மாலை, திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் வந்தார்.
பின், அங்கிருந்து புறப்பட தயாரான போது, ராஜ்குமாரை வழிமடக்கி, குடிபோதையில் இருந்த மிட்டகண்டிகையைச் சேர்ந்த ராமு, 50, என்பவர், எங்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனக் கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கனகம்மாசத்திரம் போலீசார், ராமுவை பிடித்த போது, அவரிடம் இரண்டு மதுபாட்டில் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து ராமுவை, ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மதுவிலக்கு போலீசார் ராமுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.