/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாலிபரை தாக்கி மிரட்டல் விடுத்தவருக்கு வலை
/
வாலிபரை தாக்கி மிரட்டல் விடுத்தவருக்கு வலை
ADDED : மே 27, 2025 08:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:கடம்பத்துார் அடுத்த ராமன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் டில்லிபாபு, 25. மண்ணுாரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் இவர் கடந்த 25ம் தேதி மாலை செஞ்சி பனம்பாக்கம் ரயில் நிலையம் அருகே கிரிக்கெட் விளையாடி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் முன்விரோதம் காரணமாக ஆபாசமாக பேசி கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.
இதுகுறித்து டில்லிபாபு கொடுத்த புகாரின்படி கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.