/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளி மாணவருக்கு குட்கா விற்றவர் கைது
/
பள்ளி மாணவருக்கு குட்கா விற்றவர் கைது
ADDED : டிச 14, 2024 09:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், மணவூர் ஊராட்சி, கலைஞர்புரத்தை சேர்ந்தவர் பிரசாந்த் 35; இவர், குட்கா, ஹான்ஸ், விமல் பாக்கு உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து பள்ளி மாணவர்கள், பெட்டி கடைக்கு விற்பனை செய்வதாக திருவாலங்காடு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
அதன்படி நேற்று முன்தினம் இரவு, போலீசார் பிரசாந்த் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, ஹான்ஸ் 10, விமல் 450, விஒன் 450 என, 910 பாக்கெட்டுகளில் இருந்த குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து பிரசாந்தை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.