ADDED : ஏப் 18, 2025 09:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டையை சேர்ந்த தேவராஜ் என்பவர், பாண்டரவேடு அருகே கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.
கடந்த 24ம் தேதி இரவு கோழிப்பணையில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், தேவராஜை தலையில் தாக்கி விட்டு அவரது மொபைல் போனை பறித்து தப்பியோடினர். இது குறித்து விசாரித்த பொதட்டூர்பேட்டை போலீசார், நேற்று ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரத்தை சேர்ந்த தினேஷ், 22, என்பவரை கைது செய்தனர்.