/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
/
மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
ADDED : செப் 03, 2025 01:36 AM
புல்லரம்பாக்கம்:புல்லரம்பாக்கம் பகுதியில் மூதாட்டியை வெட்டி நகை பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் ஈக்காடு கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் மதன்ராஜ் மனைவி பரிமளா, 50. இவர் கடந்த மார்ச் மாதம் மாடுகளை மேய்த்துக்கு தனது நிலத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் அவரை வெட்டி கழுத்தில் கிடந்த 11 சவரன் தங்க செயினை பறித்து சென்றார்.
இதுகுறித்து பரிமளா கொடுத்த புகாரின்படி புல்லரம்பாக்கம் போலீசார் விசாரித்து வந்தனர்.
விசாரணையில் மூதாட்டியை வெட்டி நகை பறித்தவர் புன்னப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் தமிழ்ச்செல்வன், 24 எனவும் இவர் மீது பல வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.
திருவள்ளூர் டி.எஸ்.பி., தமிழரசி தலைமையில் சிறப்பு படை போலீசார் நேற்று முன்தினம் புன்னப்பாக்கத்தில் வீட்டில் பதுங்கியிருந்த தமிழ்செல்வனை கைது செய்தனர்.