ADDED : அக் 06, 2025 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி, திருத்தணி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 34. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் வசித்து வரும் உறவினர் ஏழுமலை, 39, என்பவருக்கும், தனலட்சுமிக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை ஏழுமலை, திருத்தணி மேட்டுத் தெருவிற்கு வந்தார். அப்போது, வீட்டின் வெளியே நின்றுக் கொண்டிருந்த தனலட்சுமியை தாக்கிவிட்டு, அவரது கழுத்தில் அணிந்திருந்த, 2.5 சவரன் தங்கச் செயினை பறித்து விட்டு தப்பினார்.
இதுகுறித்து, தனலட்சுமி அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து ஏழுமலையை கைது செய்து, செயினை பறிமுதல் செய்தனர்.