/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டிபன் கடை உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் திருடியவர் கைது
/
டிபன் கடை உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் திருடியவர் கைது
டிபன் கடை உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் திருடியவர் கைது
டிபன் கடை உரிமையாளரிடம் ரூ.3 லட்சம் திருடியவர் கைது
ADDED : செப் 26, 2025 10:26 PM
திருத்தணி:டிபன் கடை உரிமையாளரிடம், நூதன முறையில் 3 லட்சம் ரூபாய் திருடிய, ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜெகதீசன், 40. இவர், திருத்தணி - அரக்கோணம் சாலையில் டிபன் கடை நடத்தி வருகிறார். கடந்த 3ம் தேதி காலை, வழக்கம் போல் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, 20 வயது மதிக்கத்தக்க வாலிபர், 'பேடிஎம்' நிறுவனத்தில் இருந்து வருவதாக கூறி, ஜெகதீசனிடம் மொபைல்போனை வாங்கியுள்ளார்.
அதன்பின், மொபைல்போனை திருடி கொண்டு பைக்கில் தப்பினார். அந்த மொபைல்போனில் இருந்த ஆவணங்களை பயன்படுத்தி, 2.24 லட்சம் ரூபாய் லோன் எடுத்துள்ளார். மேலும், ஜெகதீசனின் வங்கி கணக்கில் இருந்த 81,000 ரூபாயையும் சேர்த்து, 3.05 ரூபாயை வாலிபர் எடுத்துள்ளார்.
இதுகுறித்து ஜெகதீசன், திருத்தணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, ஆந்திர மாநிலம் புத்தூர், திம்மராஜகண்டிகையைச் சேர்ந்த ஜெயகுமார், 21, என்பவர் திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே பதுங்கியிருந்த ஜெயகுமாரை, நேற்று போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.