/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பட்டா கத்தியுடன் 'ரீல்ஸ்' எடுத்தவர் கைது
/
பட்டா கத்தியுடன் 'ரீல்ஸ்' எடுத்தவர் கைது
ADDED : நவ 23, 2025 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதட்டூர்பேட்டை: பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில், இளைஞர் ஒருவர் பட்டா கத்தியுடன் 'ரீல்ஸ்' எடுத்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிப்பட்டு தாலுகா நொச்சலி தலையாறி காலனியைச் சேர்ந்தவர் ராஜதுரை, 22. இவர், நேற்று பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில், பட்டா கத்தியுடன் 'ரீல்ஸ்' எடுத்துக் கொண்டிருந்தார். இதுகுறித்து பயணியர், பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த எஸ்.ஐ., சுகந்தி மற்றும் போலீசார், பொதுமக்கள் மற்றும் பயணியரை அச்சுறுத்தும் வகையில், பட்டா கத்தியுடன் 'ரீல்ஸ்' எடுத்த ராஜதுரையை கைது செய்தனர்.

