/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உலக கழிப்பறை தினம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
உலக கழிப்பறை தினம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : நவ 23, 2025 03:12 AM
திருவள்ளூர்: காக்களூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவள்ளூர் அடுத்த காக்களுர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று, உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் பேசியதாவது:
துாய்மை பாரத இயக்கம் திட்டத்தின் மூலம், உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு, பொதுமக்களிடையே பல்வேறு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி, கடந்த 19ல் துவங்கி, டிச., 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்களுக்கு, சுய சுத்தம், சுகாதார பழக்கவழக்கம், கழிப்பறையின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், பயனாளிகளுக்கு கழிப்பறை அமைத்தல், பயன்பாட்டில் இல்லாத தனிநபர் மற்றும் சமுதாய சுகாதார வளாகங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், ஊராட்சிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், கட்டுரை, பேச்சு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

