/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கத்தியை காட்டி மிரட்டி 'மாமூல்' கேட்டவர் கைது
/
கத்தியை காட்டி மிரட்டி 'மாமூல்' கேட்டவர் கைது
ADDED : மார் 18, 2025 12:50 AM
திருத்தணி; திருத்தணி கீழபஜார் தெருவைச் சேர்ந்தவர் திலகவதி, 35. இவர், திருத்தணி மேட்டுத் தெரு ரயில்வே கேட் அருகே மீன்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று காலை வழக்கம் போல் திலகவதி கடையில் வியாபாரம் செய்துக் கொண்டிருந்தார்.
அப்போது, மது போதையில் வந்தவர், திலகவதியிடம் 200 ரூபாய் தருமாறு கத்தியைக் காட்டி மிரட்டினார்.
அவ்வழியாக வந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
திருத்தணி மேட்டுத் தெருவைச் சேர்ந்த வடிவேல், 50, என தெரியவந்தது.
மேலும், வடிவேல் மீது திருத்தணி காவல் நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.