/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எஸ்.ஐ.,யின் ஸ்கூட்டரை திருட முயன்றவர் கைது
/
எஸ்.ஐ.,யின் ஸ்கூட்டரை திருட முயன்றவர் கைது
ADDED : ஜன 31, 2025 09:23 PM
திருமங்கலம்:திருமங்கலம் போக்குவரத்து போலீசில், சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் செந்தில்குமார், 40. இவர், நேற்று அதிகாலை, மேற்கு அண்ணாநகர் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
இதற்காக, தன் 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரை, ஜவஹர்லால் நேரு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் நிறுத்தி, சகபோலீசாருடன் போலீஸ் வாகனத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அதிகாலை 3:45 மணியளவில், மீண்டும் ஸ்கூட்டரை எடுப்பதற்காக வந்தபோது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை, சக போலீசாருடன் சேர்ந்து அந்த நபரை பிடித்து, திருமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், பெரம்பூரைச் சேர்ந்த பிரவீன், 32, என்பது தெரிந்தது. திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.