/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்தியவர் கைது
/
கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்தியவர் கைது
ADDED : பிப் 06, 2025 10:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், இ.என்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 55; இவர், கஜலட்சுமிபுரம் கிராமத்தில் அரசு அனுமதியுடன் கல்குவாரி நடத்தி வருகிறார். மேலும் அங்கு அலுவலகம் உள்ளது.
நேற்று முன்தினம் மாலை, ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், 45, என்பவர், மதுபோதையில் கல்குவாரி அலுவலகத்தின் மீது, கற்கள் வீசி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றார்.
இதுகுறித்து ரவி அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, கோவிந்தராஜை நேற்று கைது செய்தனர்.

