/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இரும்பு 'கட்டிங் மிஷின்' திரும்ப கேட்டவருக்கு அடி
/
இரும்பு 'கட்டிங் மிஷின்' திரும்ப கேட்டவருக்கு அடி
ADDED : செப் 27, 2025 11:15 PM
ஆர்.கே.பேட்டை:கட்டுமான பணிக்கு வந்தவர், இரும்பு 'கட்டிங் மிஷினை' கடனாக பெற்றுச் சென்றார். திரும்ப கேட்ட போது, வீட்டுக்குள் பூட்டி வைத்து தாக்கியுள்ளார்.
ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரத்தை சேர்ந்தவர் தாமோதரன், 66. இவர், கடந்த வாரம், அதே கிராமத்தை சேர்ந்த நரசிம்மன், 70, என்பவரிடம் கட்டுமான பணிக்காக சென்றார். பணி முடிந்து திரும்பும் போது, தாமோதரனிடம் இருந்து கட்டிங் மிஷினை வா ங்கியுள்ளார்.
அதை திரும்ப தரும்படி தாமோதரன் நேற்று கேட்டுள்ளார். ஆனால், தர மறுத்த நரசிம்மன், வீட்டுக்குள் பூட்டி வைத்து தாமோதரனை தாக்கியுள்ளார். இதுகுறித்து தாமோதரன் அளித்த புகாரின்படி, ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.