/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கச்சா எண்ணெய் திருடிய மூன்று பேர் சிக்கினர்
/
கச்சா எண்ணெய் திருடிய மூன்று பேர் சிக்கினர்
ADDED : செப் 27, 2025 11:14 PM
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அருகே, கச்சா எண்ணெய்க்கு பதில் தண்ணீர் கலந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரியபாளையம் அருகே, ஜெயபுரம் கிராமத்தில் இங்கி வரும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைக்கு, கடந்த 22ம் தேதி சென்னையில் இருந்து, 44.560 டன் கச்சா எண்ணெயை ஏற்றி வந்தார். விழுப்புரம் மாவட்டம், சரவணபாக்கத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் லாரியை ஓட்டி வந்தார்.
லாரியை தொழிற்சாலையில் நிறுத்திவிட்டு மாயமாகினார். லாரியில் இருந்த எண்ணெயை சோதனை செய்ததில், 1.420 டன் கச்சா எண்ணெய்க்கு பதில், தண்ணீர் கலந்து இருந்தது தெரியந்தது.
தொழிற்சாலை மேலாளர் ஸ்ரீவத்சவா அளித்த புகாரின்படி, பெரியபாளையம் போலீசார், லாரி ஓட்டுநரை தேடி வந்தனர்.
நேற்று லாரி ஓட்டுநர் சசிகுமார், அவரது நண்பர்களான சென்னை காலடிபேட்டை சங்கரநாராயணன், 42, ராஜ்குமார், 52, ஆகிய மூன்று பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.