ADDED : செப் 27, 2026 08:21 PM
கும்மிடிப்பூண்டி, செப். 28–
கும்மிடிப்பூண்டி அருகே, வீட்டின் பூட்டை உடைத்து திருடிக்கொண்டிருந்த நபரை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அருகே பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் வசிப்பவர் சாதிக், 38. நேற்று முன்தினம், வீட்டை பூட்டிக்கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் ஒருவர், பீரோவை உடைத்து திருடிக்கொண்டிருந்தார். பீரோவை உடைக்கும் சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அப்போது, ரோந்து பணியில் இருந்த போலீசார், அந்த நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். சிக்கிய நபர், திருவொற்றியூர் கார்கில் நகரை சேர்ந்த சுகுமார், 30, என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், சுகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
