தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலையை கடக்க முயன்றவர் பலி

சாலையை கடக்க முயன்றவர் பலி

சாலையை கடக்க முயன்றவர் பலி


ADDED : செப் 27, 2026 08:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 08:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி, செப். 28–

கும்மிடிப்பூண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையை நடந்தபடி கடக்க முயன்றவர், பைக் மோதி உயிரிழந்தார்.

கும்மிடிப்பூண்டி அருகே பன்பாக்கம் கிராமத்தில் வசித்தவர் பன்னீர், 45. வேர்க்காடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை குடியிருப்பு வளாகத்தில், ‘ஹவுஸ் கீப்பிங்’ வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை, வேலை முடிந்து, பன்பாக்கம் பகுதியில், சென்னை – கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையை நடந்தபடி கடக்க முயன்றார்.

அப்போது, கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற பைக், அவர் மீது மோதியது. துாக்கி வீசப்பட்ட அவர், படுகாயங்களுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து, கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us