/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மொபட்டில் இருந்த பணத்தை திருட முயன்றவர் சிக்கினார்
/
மொபட்டில் இருந்த பணத்தை திருட முயன்றவர் சிக்கினார்
மொபட்டில் இருந்த பணத்தை திருட முயன்றவர் சிக்கினார்
மொபட்டில் இருந்த பணத்தை திருட முயன்றவர் சிக்கினார்
ADDED : நவ 25, 2025 03:16 AM
திருத்தணி: திருத்தணி கே.கே.நகரைச் சேர்ந்தவர் மோனிஷா, 21. நர்சிங் கல்லுாரி மாணவி. நேற்று காலை திருத்தணி சித்துார் சாலையில் உள்ள வங்கியில் பணம் எடுக்க, தன் மொபட் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
வங்கியில் இருந்து எடுத்த 95,000 ரூபாயை மொபட்டின் முன் இருக்கையில் வைத்துவிட்டு, அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.
இதை நோட்டமிட்ட இருவர், வாகனத்தில் இருந்த பணத்தை எடுக்க முயன்றனர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மோனிஷா கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் வருவதை கண்ட மர்மநபர்கள் ஓட்டம் பிடித்தனர். அதில் ஒருவரை பிடித்த மக்கள், தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மற்றொருவர் தப்பிச் சென்றார்.
விசாரணையில், ஆந்திர மாநிலம் நகரி அடுத்த ஓ.ஜி.குப்பத்தைச் சேர்ந்த பாபு, 35, என்பதும், தப்பியோடிய மற்றொரு நபர் நாகப்பன், 40, என்பதும் தெரிந்தது. கைது செய்யப்பட்ட பாபு மீது, ஆந்திர மாநிலத்தில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

