/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக்கில் இருந்து விழுந்தவர் பலி
/
பைக்கில் இருந்து விழுந்தவர் பலி
ADDED : ஆக 10, 2025 10:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபாளையம்,:பெரியபாளையம் அடுத்த, ஆரிக்கம்பேடு கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை, 62. இவரது மகன் வினோத்குமார், கடந்த 8 ம் தேதி தன் பைக்கில், நண்பரின் விழாவிற்கு கும்மிடிப்பூண்டி சென்றார்.
பின் அங்கிருந்து திரும்பும்போது இரவு, அழிஞ்சிவாக்கம் - ஆத்துமேடு சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பெரியபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.